September 2012 Magazine Text (unicode) Edition Unable to view tamil? Download Tamil font here.
ஸ்ரீ ஆசார்யாள் அருளுரை
சிருங்கேரியில் சங்கரர்
தமிழ்வேதம்
வால்மீகி ஹ்ருதயம்
சுந்தரமூர்த்தி நாயனார்
மஹாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதரின் காவியங்கள்
ஸ்ரீபாரதீ தீர்த்த யாத்திரை
சித்தர்களின் குறியீட்டு மொழியும் திருமூலரின் சூனிய சம்பாஷணையும்
கந்தவேள் கதையமுதம்
மஹான்களின் மலரடி நிழலில் 30
படக்கதை
இராசிபலன்
சிருங்கேரிச் செய்திகள்
அறிந்த பெயர் அறியாத விவரம்
ஆன்மிக வினாவிடை
ஆலய தரிசனம் 25

சிறுவர் பூங்கா
அறிந்த பெயர் அறியாத விவரம்

தயாரிப்பு கங்கா இராம்மூர்த்தி

அருணி என்னும் குரங்கின அரசிக்கு சூரியனின் அருளால் பிறந்தவன் சுக்ரீவன். இந்திரனின் அருளால் தோன்றயவன் வாலி. வாலி, சுக்ரீவனுக்கு மூத்தவன். வாலி, வானர குல அரசனாகவும் சுக்ரீவன் இளவரசனாகவும் இருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் கிஷ்கிந்தையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் வானர குலப் பகைவனான அரக்கன் ஒருவன், வாலியுடன் யுத்தம் செய்ய வந்தான்.

வாலி, அரக்கனைப் போரில் வென்றதும், அரக்கன் உயிருக்கு அஞ்சித் தோற்று ஓடினான். வாலியும் அவனைத் தொடர்ந்து ஓடினான். அவனுக்குத் துணையாக சுக்ரீவனும் ஓடினான். அரக்கன் பாதாளத்திற்குப் போகும் குகை ஒன்றினுள் புகுந்தான். அப்போது வாலி, சுக்ரீவனிடம் “நான் குகைக்குள்ளே சென்று அரக்கனை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை நீ இந்தக் குகையின் வாயிலில் காத்துக்கொண்டிரு” என்று கூறி குகைக்குள்ளே சென்றான்.

குகைக்குள் சென்ற வாலி திரும்பி வருவான் என்று பல மாதங்களாக சுக்ரீவன் காத்துக் கொண்டிருந்தான். திடுமென்று ஒருநாள் குகை வாயிலில் ரத்தப்பெருக்கு வந்தது. அரக்கர்களின் கூக்குரலும் கேட்டது. சுக்ரீவன், வாலியைத் தேடி குகைக்குள் செல்லத் தீர்மானித்தபோது, அனுமனும் சில வானரர்களும் அவனைத் தடுத்தனர்.

“அரசனில்லாத நாடு அழிந்து போகும். வாலி இத்தனை காலம் உயிரோடு இருப்பானா என்பது சந்தேகமே!” என்று கூறி சுக்ரீவனை முடிசூடும்படி சம்மதிக்கச் செய்தனர். பின்பு குகையின் வாயிலை ஒரு பெரும் பாறையால் மூடிவிட்டு அனைவரும் கிஷ்கிந்தையை அடைந்தனர்.

நாள்கள் பல சென்றன. குகைக்குள் இருந்த வாலி வாயிலருகே வந்து ‘சுக்ரீவா!’ என்று பலமுறை அழைத்தான். பின்பு மிகுந்த சினத்துடன் பாறையை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தான்.

கோபத்துடன் கிஷ்கிந்தைக்குச் சென்றபோது சுக்ரீவன் அரசாளும் செய்தி அறிந்தான். சுக்ரீவன் நடந்தவற்றை நயமாக எடுத்துரைத்த போதும் வாலியின் சினம் அடங்கவில்லை. சுக்ரீவனை அடித்தான். உதைத்தான். அவனிடமிருந்து தப்பிய சுக்ரீவனும் வானரங்களும் வாலி வரமுடியாத ரிஷ்யமுக மலையை அடைந்து அங்கேயே தங்கலானார்கள். வாலி, சுக்ரீவனின் மனைவி ருமையைக் கவர்ந்து சென்றான்.

மாண்டவ்ய மகரிஷியால் சாபம் பெற்ற தர்மராஜன்-தர்மதேவதை-பூவுலகில் ஒரு பணிப்பெண்ணின் மகனாகப் பிறந்து நீதிமானாக விளங்கினார். தர்மதேவதையின் அவதாரமே விதுரர். வியாசரின் அருளால் பிறந்தவர்.

விதுரர் சிறந்த அறிவாற்றலும் மதிநுட்பமும் பெற்று, திருதராஷ்டிர மன்னரின் அமைச்சராக விளங்கினார். கௌரவர்களின் தீய குணங்களையும் பாண்டவர்களின் நற்குணங்களையும் நன்கு அறிந்ததால் விதுரர் பாண்டவர்களுக்கு ஆதரவாகவே பேசி வந்தார். அதனால் கௌரவர்களின் கோபத்தைச் சம்பாதித்தார்.

துரியோதனன் வாரணாவதத்தில், பாண்டவர்களுக்காகப் புதிய மாளிகை ஒன்றைக் கட்டச் செய்தான். அம்மாளிகையில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு பாண்டவர்களை அனுப்பி வைத்தான். மதியூகியான விதுரர் துரியோதனனின் திட்டத்தை அறிந்து, தர்மபுத்திரருக்கு அறிவுரை கூறுவது போல எச்சரித்தார். “பெரும் நெருப்பு பற்றினாலும் வளைக்குள்ளே வாழும் எலி, தீயிலிருந்து தப்பிவிடும். காட்டில் திசையறிய நக்ஷத்திரங்களைப் பார்க்க வேண்டும். துணிவுள்ளவனே இவ்வுலகில் எல்லாவற்றையும் அடைய முடியும்.”

இவ்வாறு விதுரர் மறைமுகமாகக் கூறியதை தர்மர் புரிந்து கொண்டார். துரியோதனன், புதிய மாளிகையை, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய அரக்கு போன்ற பொருள்களால் கட்டச் செய்திருந்தான். பாண்டவர்கள் அரக்கு மாளிகைக்குச் சென்ற பின்பு விதுரர், ரகசிய குகை வழியைக் கட்டச் செய்தார். ஒருநாள் இரவில் அரக்கு மாளிகை தீப்பற்றி எரிந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே பாண்டவர்கள் தாய் குந்தியுடன் ரகசியப் பாதை வழியாக வெளியேறி விட்டனர். ஆனால் துரியோதனன், சகுனி, கர்ணன் போன்றோர் மாளிகை தீப்பற்றி பாண்டவர்கள் மாண்டு போனார்கள் என்று எண்ணினார்கள். பீஷ்மர் துயரம் தாங்காமல் கதறினார். ஆனால் விதுரர் அவரிடம் பாண்டவர்கள் உயிருடன் தப்பிச் சென்றதைக் கூறிய பின்பே பீஷ்மரின் துயரம் நீங்கியது. விதுரரைப் புகழ்ந்தார்.

திரௌபதியை, பாண்டவர்கள் மணந்து கொண்டனர். விதுரர் திருதராஷ்டிர மன்னரிடம், தம்பியின் பிள்ளைகள் மீது கொண்ட பகைமையை மாற்ற ஆலோசனை வழங்கினார். அதன் பிறகே பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார்கள். கௌரவர்கள் அழைத்ததன் பேரில், தர்மர் சூதாட வந்தார். விதுரர் கூறிய அறிவுரைகளை கௌரவர்கள் ஏற்கவில்லை. தர்மர் சூதாடி அனைத்தையும் இழந்தார். பாண்டவர்களுக்காகப் பரிந்து பேசிய விதுரர், “இனி கௌரவர் வாழும் இடத்தில் வாழமாட்டேன் என்று ஊருக்கு வெளியே குடிலில் தனித்து வாழலானார்.

பாண்டவர்கள் வனத்துக்குச் சென்றனர். கிருஷ்ணன், பாண்டவர்களுக்காக, ஹஸ்தினாபுரத்திற்கு தூது வந்தார். அவர் அங்கு துரியோதனன் மாளிகையில் தங்கவில்லை. பக்தி மிகுந்த நீதி,நியாயம் நிறைந்த விதுரரின் குடிலிலே தங்கினார். அவர் அளித்த எளிமையான உணவை விரும்பி உண்டார். கிருஷ்ணர் தூது வந்து பாண்டவர்களுக்காக வாதாடியபோது, துரியோதனன் “ஐந்தடி நிலமும் கூட அளிக்க முடியாது” என்றான்.

திருதராஷ்டிர மன்னர், சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்பினார். சஞ்சயனும் விராட நகருக்குச் சென்று பாண்டவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பி வந்தான். வந்ததும், “உடம்பு களைத்திருக்கிறது. தர்மபுத்திரரிடம் நீர் அன்பு கொள்ளவில்லை. அங்கு நடந்ததை நான் நாளை கூறுவேன்” என்று கூறி சஞ்சயன் உறங்கச் சென்று விட்டான். ஆனால் திருதராஷ்டிர மன்னருக்கு கவலையால் உறக்கம் வரவில்லை. விதுரரை அழைத்து வரச் சொன்னார். விதுரர் மன்னரின் கவலைக்குரிய காரணத்தை அறிந்தார். மன்னருக்கு பலப்பல நீதிகளை விதுரர் போதித்தார். அவை 350 சுலோகங்களாக மகாபாரதத்தில் ‘விதுரநீதியாக’ வியாசரால் எழுதப்பட்டுள்ளன. விதுரநீதி அன்றும் இன்றும் என்றும் மனித குலத்துக்கு உரிய நீதி போதனைகளாகும்.

பாரதப்போர் நடைபெறுவதைத் தடுக்க இயலாது என்றறிந்ததும் விதுரர் தன்னுடைய தனுசை இரண்டாக உடைத்து எறிந்து விட்டார். பலராமரைப் போல விதுரரும் தீர்த்த யாத்திரை சென்றார்.

உடன் பிறந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்வதைக் காண விதுரர் விரும்பவில்லை. யுத்தம் முடிந்த பிறகும் அவர் நாட்டிற்கு வரவில்லை. காட்டில் தவ வாழ்வு வாழ்ந்து வந்தார். சடைமுடியும் வற்றிய உடம்புமாக தவம் புரிந்து கொண்டிருந்த விதுரரை, தர்மபுத்திரர் பார்த்து, இவர் விதுரரே என்று அடையாளம் கண்டு கொண்டார். அவரைத் துதித்து வணங்கினார். விதுரர் தாம் பெற்ற தவவலிமையால் தர்மபுத்திரரின் உயிருடன் கலந்து தேகத்தைக் கீழே சாய்த்தார்.

மகாபாரதத்தில் ஞானம் மிகுந்தவராக, நீதியறிந்தவராக நல்ல போதனைகளைக் கூறவல்லவராக விளங்கியவர், விதுரர் ஆவார்.

சின்னஞ்சிறுகதை

நண்பனின் வாக்குறுதி

ஒரு தனவந்தர், இரவு நேரத்தில் தன்னுடைய பணப் பெட்டியைக் கவிழ்த்து அதிலிருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். தனவந்தர் பணத்தை அடுக்கிக் கொண்டிருந்த போது திடும்மென்று விளக்கு அணைந்து விட்டது.

இருட்டில் கீழே சிதறியுள்ள ரூபாய், சில்லறையை நண்பன் அள்ளிக் கொள்வானோ என்று தனவந்தருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர் எதிரிலிருந்த நண்பரின் கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“நண்பா! நான் உன்னிடம் ஒரு வாக்குறுதி கேட்கிறேன். பல வருஷங்களாக நானும் நீயும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இனியும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் இருவரும் இன்றுபோல் என்றும் நட்புடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன். நீயும் விரும்புகிறாய் என்றால் விளக்கு வந்ததும், தீபம் சாட்சியாக எனக்கு வாக்குறுதி கொடு” என்று கூறிய தனவந்தர் தம் மனைவியிடம் சீக்கிரம் விளக்கேற்றிக் கொண்டு வருமாறு கூறினார்.

விளக்கு வந்த பிறகு நண்பர் வாக்குறுதி தந்த பிறகே, அவருடைய கையை தனவந்தர் விட்டார். தனவந்தரின் சந்தேகத்தை அந்த நண்பர் அறியவில்லை, பாவம்!